இலங்கையில் பால்மா விலை உயரும் சாத்­தியம்

1120 0

உலக சந்­தையில் பால்­மாவின் விலை அதி­க­ரித்­துள்ள கார­ணத்­தினால் இலங்­கையில் பால்­மாவின் விலையை அதி­க­ரிக்­க­வேண்­டு­மென்று பால்மா உற்­பத்­தி­யா­ளர்கள் நிறு­வனம்,  நுகர்வோர் அதி­கார சபை­யிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

அமெ­ரிக்க டொலரின் விலை 160 ரூபா­வாக அதி­க­ரித்த கார­ணத்­தினால் உலக சந்­தையில் பால்மா விலை அதி­க­ரித்­துள்­ளது. அதனால் இலங்­கையில் விற்­பனை செய்­யப்­படும் பால்­மாவின் விலையை 70 ரூபா­வினால் அதி­க­ரிப்­ப­தற்கு பால்மா உற்­பத்­தி­யா­ளர்கள் நிறு­வனம் நுகர்வோர் அதி­கார சபை­யிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

உலக சந்­தையில் ஒரு மெட்­ரிக்தொன் பால்மா 3250 அமெ­ரிக்க டொலர் அற­வி­டப்­பட்ட நிலையில், டொலர் விலை­யேற்­றத்­தினால் ஒரு மெட்­ரிக்தொன் பால்மா 3450 அமெ­ரிக்க டொல­ராக அதி­க­ரித்­தது. இதனால் பழைய விலையில் பால்மா விற்­பனை செய்­வதால் பல இடை­யூ­று­களை சந்தித்துவருவதாகவும் பால்மா உற்பத்தியாளர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a comment