அரசாங்கத்திலிருந்து முற்றாக விலகும் வரை ஸ்ரீ ல.சு.க.யுடன் பேச்சுவார்த்தை இல்லை- மஹிந்த

7850 34

நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெளியேறுவதற்கு விரைவாக தீர்மானம் எடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அரசாங்கத்திலிருந்து விலகியதன் பின்னரே இரு தரப்பும் பேச்சுவார்த்தை குறித்து கவனம் செலுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து 16 பேர் அரசாங்கத்துடன் உள்ள உறவை முறித்துக் கொண்டு வெளியேறியுள்ளனர். இவர்கள் மஹிந்த ராஜபக்ஷவையும் மைத்திரிபால சிறிசேனவையும் இணைத்து வைப்பதற்கு பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அவர்களுக்கான பதிலாகவே இதனைக் கூறியுள்ளார்.

Leave a comment