சட்டசிக்கல் இல்லாவிட்டால் மஹிந்த ராஜபக்ஷவே ஜனாதிபதி வேட்பாளர்

272 0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களுடனும் தான் எவ்வித பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவ்வாறான குழுக்களை ஏற்றுக் கொள்ள தயாரில்லை என்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

இன்று (14) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட இரண்டு கட்சிகள் இணைந்து இன்று அரசாங்கம் அமைத்திருப்பதாக அவர் கூறினார்.

சட்ட சிக்கல் இல்லை என்றால் 2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவது மக்கள் எதிர்பார்க்கும் தலைவரான மஹிந்த ராஜபக்‌ஷ என்றும் அவ்வாறில்லாவிட்டால் மஹிந்த ராஜபக்‌ஷவால் கூறப்படும் நபருக்கு ஆதரவளிப்பதாகவும் பசில் ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

இரண்டு பக்கங்களிலும் கால் வைத்திருக்கும் நபர்கள் சம்பந்தமாக மக்கள் எதிர்காலத்தில் தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் என்றும் பசில் ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

Leave a comment