மஸ்தானுக்கு எதிராக போராட்டம்

8 0

இந்து விவகார பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்  நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் இந்து மக்கள் ஒற்றுமை அமைப்பினர்  போராட்டம்!

இந்து விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்து மக்களின் ஒற்றுமை அமைப்பினர் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரம் காந்திப் பூங்கா முன்னால் இன்று மாலை 5.45 மணியளவில் மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்து விவகாரங்களுக்கு முஸ்லிம் ஒருவரை பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டது இந்து மக்களை அவமானப்படுத்தும் செயலாகும்,  இதனால் இந்து முஸ்லிம் மதங்களுக்கிடையே முரன்பாடுகளை தோற்றுவிக்க வழிவகுக்கும் எனவே இப் பிரதியமைச்சர் நியமனத்தை உடனடியாக இரத்துச் செய்து பொருத்தமான ஒருவருக்கு வழங்கவும் என இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் கருத்துத் தெரிவித்தனர்.

அண்மையில் ஜனாதிபதியால் இந்து விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டார். இந் நியமனம் தொடர்பில் நாடு பூராவுமுள்ள இந்துக்கள் பல பகுதிகளிலும் எதிர்ப்பை தெரிவித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Post

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன்னால் சமுர்த்தி பயனாளிகள் போராட்டம்

Posted by - August 2, 2017 0
பருத்தித்துறை  பிரதேச செயலகத்திற்கு முன்னால் சமுர்த்தி பயனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 10 வருடங்களாக சமுர்த்தி நிவாரணம் பெற்று வந்த வடமராட்சி  பகுதி மக்கள் பருத்தித்துறை பிரதேச…

முள்ளிவாய்க்கால்!

Posted by - May 13, 2018 0
புனித ஆன்மாக்களின் புகழுடல்கள் புதைந்த மண்ணில் யார் யாரோ வந்து  மலம் கழிக்க துடிக்கிறனர் அரசியல் பொறுக்கிகளே இது ஒன்றும் வாக்குப் பொறுக்கும் இடமல்ல நீங்கள் வந்து…

இலங்கைக்கு ஆதரவு – நாக்கு பேரை பதவியில் இருந்து நீக்கினார் ட்ரம்ப்

Posted by - January 31, 2017 0
அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் 4 பேர், அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பால் பதவி நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும், இலங்கை படையினர் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டினை…

மன்னாரில் மனித எலும்புக்கூடுகள் மண்டையோடுகள் தென்படுகின்றன!

Posted by - June 22, 2018 0
மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வு பணிக்காக திட்டமிட்ட இடங்களில் தொடர்ந்து மனித எலும்புக்கூடுகள் மண்டையோடுகள் தென்படுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

கார்த்திகை 27ல் அரசியல் பேச்சிற்கு இடமில்லை.!

Posted by - November 21, 2018 0
எதிர்வரும் கார்த்திகை 27 ஆம் திகதி வட கிழக்கு பகுதிகளில் மாவீரர் துயிலு மில்லங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் மிக விமர்சையாக நடைபெற ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்…

Leave a comment

Your email address will not be published.