மீள்குடியேற்ற செயலணியில் வடக்கு மாகாணசபையையும் இணைக்க தீர்மானம்

9 0

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான மீள்குடியேற்ற செயலணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பையும், முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்துக் கொள்வதுடன், வடக்கு மாகாண சபையையும் பங்காளராக்கவேண்டும் என்று கோரி வடக்கு மாகாண சபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வடமாகாணசபையின் 124ஆவது சபை அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சபையில் சிறப்பு கவனயீர்ப்பு ஒன்றை கொண்டு வந்த மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் உரையாற்றுகையில்,

சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள்குடியமர்த்துவதற்கான செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த செயலணியில் தமிழ் மக்களும் உள்ளீர்க்கப்பட்டு அவர்களும் மீள்குடியமர்த்தப்படவேண்டும் என நாங்கள் கேட்டுவந்தோம்.

அதனை பேச்சில் அங்கீகரித்த செயலணி, பின்னர் தனியே சிங்கள, முஸ்லிம் மக்களை மட்டும் மீள்குடியமர்த்தும் பணிகளைச் செய்து வருகின்றது.

இந்த நிலையை மாற்றியமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பையும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் செயலணியில் இணைத்துக் கொள்ளவேண்டும்.

அதன் ஊடாகவே தமிழ் மக்களையும் மீள்குடியமர்த்துவதற்கான செயலணியாக இந்த செயலணியை மாற்ற இயலும் என்று கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம்,

அரசியல் கட்சிகளை உள்ளீர்ப்பதனால் மேற்படி செயலணி முன்னர் செய்த தவறுகள் எல்லாவற்றையும் சரி என நாங்கள் ஒத்துக் கொள்வதாக அமையும்.

ஆகவே வடக்கு மாகாண சபையை அதற்குள் உள்ளீர்க்கவேண்டும் என தீர்மானம் எடுங்கள் என்று கூறினார்.

இதற்கமைய மேற்படி செயலணியில் தமிழ்தேசிய கூட்டமைப்பையும், முஸ்லிம் காங்கிரஸையும், வடக்கு மாகாண சபையையும் உள்ளீர்க்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று கூறப்பட்டது.

Related Post

சிறுமிகள் மூவர் துஸ்பிரயோகம்! முதல்வரின் பணிப்புரைக்கமைய விசேட பொலிஸ் குழு நியமனம்

Posted by - May 30, 2017 0
திருகோணமலை – மல்லிகைத் தீவு பெருவளிப் பகுதியில் மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க விசேட பொலிஸ் குழுவொன்றை நியமிக்குமாறு கிழக்கு…

1,500 பனைகள் தீயில் எரிந்து அழிந்துள்ளது

Posted by - August 4, 2018 0
மன்னார் மாவட்டத் ஓலைத் தொடுவாய் பகுதியில் ஆயிரத்து 500 பனைகள் தீயில் எரிந்து நாசமாகியது. தீபற்றியதை அடுத்து, மக்களும் மாவட்டத்தில் இருந்த படையினரும் பல மணிநேரம் தண்ணீர்…

இந்திய மீனவர்கள் 8 பேர் கைது

Posted by - September 19, 2017 0
 குறித்த மீனவர்களுடன் அவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்கு பயன்படுத்திய ட்ரோலர் இயந்திரங்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை கைது செய்யப்பட மீனவர்கள்,ட்ரோலர் இயந்திரங்கள் மற்றும் ஏனைய உபகரணங்கள்…

தமிழகத்தில் இருந்து வந்தோர் மாதகலில் அதிரடிக் கைது!

Posted by - May 16, 2018 0
தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 4 பேர் யாழ்ப்பாணம், மாதகலில் கைது செய்யப்பட்டுள்ளனர். படகு மூலம் நாடு திரும்பியபோதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. கைது…

மட்டக்களப்பு விமான நிலையத்தில் 317 கோடி ரூபாய் செலவில் உள்ளுர் பறப்பு சேவை

Posted by - July 10, 2016 0
மட்டக்களப்பு விமான நிலையத்தில் 317 கோடி ரூபாய் செலவில் உள்ளுர் பறப்பு விமானப் போக்குவரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞாயிற்றுக்கிழமை (ஜுலை 10, 2016) ஆரம்பித்து வைத்தார்.சிவில்…

Leave a comment

Your email address will not be published.