வங்காளதேசத்தில் பிரபல எழுத்தாளர் சுட்டுக்கொலை

13 0

வங்காளதேசத்தை சேர்ந்தவர் பிரபல எழுத்தாளர் ஷாஜகான் பாச்சுவை மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 நபர்கள் சுட்டுக் கொலை செய்தனர். 

வங்காளதேசத்தை சேர்ந்தவர் பிரபல எழுத்தாளர் ஷாஜகான் பாச்சு (வயது 60). இவர் பிஷாகா புராக்காசோனி என்ற பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார். மதசார்பற்ற கொள்கைகள் பற்றி துணிச்சலுடன் தனது கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

இவர் நேற்று முன்தினம் தனது பூர்வீக கிராமமான ககால்டியில் இருந்தார். அங்கு அவர் நோன்பு திறப்புக்கு முன்பாக ஒரு மருந்துக்கடைக்கு, தனது நண்பர்களை சந்திப்பதற்காக சென்று இருந்தார்.

அப்போது அங்கே 2 மோட்டார் சைக்கிள்களில் 5 நபர்கள் வந்தனர். அவர்கள் ஷாஜகான் பாச்சு இருந்து கொண்டிருந்த மருந்துக்கடையின் மீது கச்சா வெடிகுண்டுகளை வீசினார்கள். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து அவர்கள் மருந்துக்கடையில் இருந்த ஷாஜகான் பாச்சுவை தரதரவென்று வெளியே இழுத்து வந்தனர். அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுத்தள்ளிவிட்டு அங்கு இருந்து தப்பினர்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணம் ஆனார்.

இந்த சம்பவத்துக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. மதசார்பற்ற கொள்கைக்கு அவர் ஆதரவாக பேசி வந்ததால் பல முறை அவருக்கு மத அடிப்படைவாத அமைப்புகளிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பயங்கரவாத தடுப்பு போலீஸ் படையினர் அங்கு விரைந்து, ஷாஜகான் பாச்சு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட ஷாஜகான் பாச்சு, வங்காளதேச கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆவார்.வங்காளதேசத்தில் மதசார்பின்மைக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள், எழுதுகிறவர்கள், வலைத்தள பதிவாளர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்கதை ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Post

மொஸ்கோ நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி

Posted by - August 1, 2017 0
ரஷ்யாவின் மொஸ்கோ நகரின் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கைவிலங்கு போடப்பட்டிருந்த கைதியொருவர் கைவிலங்களால் சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரியின் கழுத்தை நெரித்துள்ள…

இரண்டு விஞ்ஞானிகளுடன் ஷெங்ஸோ 11 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது சீனா

Posted by - October 17, 2016 0
சீனா, இரண்டு விஞ்ஞானிகளுடன் ’ஷெங்ஸோ 11’ என்ற விண்கலத்தை இன்று காலை விண்ணில் செலுத்தியுள்ளது.விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை நிறுவிட திட்டமிட்டுள்ள சீனா கடந்த 2013-ம் ஆண்டு…

துருக்கியில் ஊடகங்கள் மூடப்படுகின்றன

Posted by - July 28, 2016 0
நூற்றுக் கணக்கான துருக்கி ஊடகங்கள் மூடப்படவுள்ளன. இதற்கான உத்தரவை அரசாங்கம் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15ம் திகதி அங்கு இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு ஆதரவளித்ததாக தெரிவித்து,…

சிரியா மீது தாக்குதல்: டிரம்ப் நடவடிக்கையை கண்டித்த ஹிலாரி கிளிண்டன்

Posted by - April 9, 2017 0
சிரியா மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு, ஹிலாரி கிளிண்டன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொலம்பியாவில் இன்று 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Posted by - September 14, 2016 0
கொலம்பியாவில் இன்று 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் Quake  பொகோட்டா: தென்னமெரிக்க நாடான கொலம்பியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.தென்னமெரிக்க நாடான கொலம்பியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

Leave a comment

Your email address will not be published.