சிரியாவில் அரசு படைகளின் வான்வழி தாக்குதலில் 10 பேர் பலி

6 0

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் அரசு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்குள்ள இட்லிப் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர்.
இந்நிலையில், சிரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஹசாகே மாகாணத்தில் அமெரிக்கா தலைமையிலான படையினர் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 10 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இட்லிப் மாகாணத்தின் பின்னிஷ், ராம் ஹம்தான், டப்தனாஸ் கிராமங்களை குறிவைத்து நேற்று முன்தினம் சிரிய அரசு படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் ஒரு இளம்பெண் உள்பட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக கடந்த 8-ந் தேதி இந்த மாகாணத்தில் ரஷிய படைகள் நடத்திய வான்தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தது அங்கு சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
சிரிய அரசு படைகளின் இந்த வான்தாக்குதல் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ஆழ்ந்த கவலை தெரிவித்து உள்ளார். இட்லிப் மாகாணம் போர் நிறுத்த பகுதியாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அந்த ஒப்பந்தத்துக்கு உறுதியேற்றவர்கள், தங்கள் பொறுப்புடைமையை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Related Post

கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்

Posted by - June 29, 2018 0
பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர்கள் நடிகர் பிரகாஷ் ராஜை கொலை செய்ய திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உ.பி. பா.ஜனதா துணைத்தலைவர் தயாசங்கர் சிங் இடைநீக்கம் ரத்து

Posted by - March 12, 2017 0
தயாசங்கர் சிங்கை இடைநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை அந்த மாநில பாரதீய ஜனதா தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா நேற்று ரத்து செய்தார்.

சீனாவில் முந்தைய கின்னஸ் சாதனையை முறியடித்த 953 கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி

Posted by - October 4, 2016 0
சீனாவில் 953 கலைஞர்கள் பங்கேற்று நிகழ்த்திய இசை நிகழ்ச்சி இதற்கு முந்தையை கின்னஸ் சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளது.

ஹாக்கியை பிரபலப்படுத்தும் முயற்சி – ஒடிசா முதல் மந்திரிக்கு முன்னாள் ஹாக்கி கேப்டன் பாராட்டு

Posted by - June 22, 2018 0
ஹாக்கி விளையாட்டை பிரபலப்படுத்த வேண்டும் என்ற ஒடிசா முதல் மந்திரி நவின் பட்நாயக்கின் முயற்சியை முன்னாள் ஹாக்கி கேப்டன் பாராட்டியுள்ளார். 

விமானத்தில் பயணம் செய்தபோது ஹெட்போன் வெடித்து பெண் காயம்

Posted by - March 16, 2017 0
ஆஸ்திரேலியாவில் விமான பயணத்தின்போது ‘ஹெட்போன்’ சாதனம் அணிந்து பாடல் கேட்டு வந்தபோது, அது வெடித்து பெண் ஒருவர் காயம் அடைந்தார். சீனத்தலைநகர் பீஜிங்கில் இருந்து ஆஸ்திரேலிய நாட்டில்…

Leave a comment

Your email address will not be published.