தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை – பெரியாறு, வைகை அணைகள் நீர் மட்டம் உயர்வு

8 0

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பெரியாறு, வைகை அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. 

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கேரளாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. நேறறு முன்தினம் 121.40 அடியாக இருந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் நேற்று காலை 4 அடி வரை உயர்ந்து 125 அடியாக அதிகரித்தது.

நேற்று 9,479 கன அடியாக நீர் வரத்து இருந்த நிலையில் இன்று காலை 4,824 கன அடியாக குறைந்தது. இருந்தபோதும் அணையின் நீர் மட்டம் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 126.10 அடியாக அதிகரித்துள்ளது.

பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 1400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் இருப்பு 3,856 மில்லியன் கன அடியாக உள்ளது. கடந்த 4 நாட்களில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 10 அடி வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு முறையாக தண்ணீர் திறக்கப்படாவிட்டாலும் அணையில் நீர் வரத்து அதிகரிப்பை கருத்தில் கொண்டு 1400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதனால் கம்பம், கூடலூர், சின்னமனூர் ஆகிய பகுதிகளில் உள்ள குளங்கள், கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. சின்னமனூர், பாலார்பட்டி, மார்க்கையன்கோட்டை ஆகிய பகுதிகளில் முதல் போகத்திற்கான நாற்றங்கால் நடவு பணி தொடங்கியுள்ளது.

பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாலும் வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியான மூல வைகை ஆறு, வரு‌ஷநாடு ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருவதாலும் வைகை அணை நீர் மட்டம் 37.57 அடியாக அதிகரித்துள்ளது.

அணைக்கு 1071 கன அடி தண்ணீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 768 மில்லியன் கன அடியாக உள்ளது. பெரியாறில் 58 மி.மீ, தேக்கடியில் 12.4 மிமீ மழை அளவு பதிவாகியுள்ளது.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் விரைவில் திறக்கப்படும் என்பதால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Related Post

இரட்டை இலை முடக்கத்துக்கு பா.ஜனதா காரணம் இல்லை: தமிழிசை சவுந்தரராஜன்

Posted by - March 23, 2017 0
அ.தி.மு.க கட்சியின் சின்னத்தை முடக்கி அரசியல் ஆதாயம் தேடவேண்டிய நிலையில் பா.ஜனதா இல்லை எனவும், சின்னம் முடக்கத்துக்கு பா.ஜனதா காரணம் இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணம்: விசாரணை கமி‌ஷனில் இன்று தீபக் ஆஜர்

Posted by - December 14, 2017 0
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இராமநாதபுரம் அருகே அதிகாலையில் 3 வாகனங்கள் மோதல் – 2 பேர் பலி, 21 பேர் காயம்

Posted by - March 5, 2019 0
இராமநாதபுரம் அருகே மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  இராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுலி அருகே மாநில நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று…

தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க இலங்கை நடவடிக்கை

Posted by - December 25, 2016 0
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீர இதற்கான பணிப்புரையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நத்தார் தினம்,…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சியில் த.மா.கா. உண்ணாவிரதம்

Posted by - April 6, 2018 0
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி த.மா.கா. சார்பில் திருச்சியில் இன்று காலை ஜி.கே.வாசன் தலைமையில் உண்ணாவிரதம் தொடங்கியது. 

Leave a comment

Your email address will not be published.