எர்ணாகுளம் காய்கறி மார்க்கெட்டில் குப்பைகளை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நீதிபதி

8 0

எர்ணாகுளம் காய்கறி மார்க்கெட்டில் குப்பைகளை அகற்றக்கோரி நீதிபதி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கேரள மாநிலம் எர்ணாகுளத்தின் மைய பகுதியில் காய்கறி மார்க்கெட் உள்ளது.

இந்த மார்க்கெட்டில் தேங்கும் குப்பைகள் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்தது. ஒரு வாரமாகியும் இந்த குப்பைகள் அகற்றப்படவில்லை.

இதுபற்றி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் அருகில் உள்ள பள்ளி நிர்வாகத்தினர் கொச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பிறகும் குப்பைகள் அகற்றப்படவில்லை.

இந்த நிலையில் எர்ணாகுளம் சட்ட உதவி மைய துணை நீதிபதி பசீர் நேற்று இக்குப்பைகளை அகற்றக்கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். காய்கறி மார்க்கெட் அருகே குவித்து வைக்கப்பட்ட குப்பைகளின் அருகில் அமர்ந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது கொச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. அவர்கள் மின்னல் வேகத்தில் மார்க்கெட்டுக்கு வந்தனர். 1 மணி நேரத்தில் குப்பைகள் அனைத்தையும் அகற்றினர்.

நீதிபதி ஒருவர் நேரடியாக களத்தில் இறங்கி போராடியதும், இதனால் ஒரு வாரமாக தேங்கி கிடந்த குப்பை உடனடியாக அகற்றப்பட்டதும் அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

கேரளாவில் கடந்த சில மாதங்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. சுகாதார சீர்கேடே இந்நோய்களுக்கு காரணம். எனவே சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைக்க வேண்டும். எனவே தான் குப்பைகளை அகற்ற போராட்டத்தில் ஈடுபட்டேன்.

இப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பலர் இதுபற்றி புகார் தெரிவித்தனர். அக்கம் பக்கத்தினரும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றே இப்போராட்டத்தை நடத்தினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, எர்ணாகுளம் காய்கறி மார்க்கெட்டில் தினமும் 6 முதல் 7 லோடு குப்பைகள் தேங்கும். அவற்றை உடனுக்குடன் அகற்றுவோம். கடந்த 2 நாட்களாக மழை பெய்ததால் குப்பைகளை அகற்ற முடியவில்லை. எனவேதான் குப்பைகள் தேங்கி விட்டது என்றனர்.

Related Post

அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற பா.ஜ.க.வினர் கடுமையாக தேர்தல் பணியாற்றுவார்கள்- இல.கணேசன் பேட்டி

Posted by - March 19, 2019 0
40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற பா.ஜ.க.வினர் கடுமையாக தேர்தல் பணியாற்றுவார்கள் என்று, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார். பா.ஜ.க.வின் திருச்சி பெருங்கோட்டத்திற்கு…

சென்னை-ஆவடியில் தமிழிசை, எச்.ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தை மறியல்: 100 பேர் கைது

Posted by - October 25, 2017 0
சென்னை மற்றும் ஆவடியில் தமிழிசை, எச்.ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொழில் அதிபர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

Posted by - September 11, 2018 0
தொழில் அதிபர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் முடிவு தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்: முரளிதரராவ்

Posted by - March 29, 2017 0
“ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் முடிவு தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்”, என்று தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதரராவ் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.