இலங்கை ஆசியாவின் குப்பைத் தொட்டியாக மாறிவிட்டது-வசந்த சமரசிங்க

287 0
சிங்கப்பூருடன் இலங்கை ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதால், இலங்கையை காதால் இழுத்து சென்று எட்கா ஒப்பந்தத்தில் கையொப்பமிட வைக்க இந்தியாவுக்கு முடியுமென மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கை சிங்கப்பூருடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் மிகவும் விசித்திரமாக உள்ளது. இலங்கையின் பொருளாதாரம் இப்போது சிங்கப்பூரிடம் சிக்கிக்கொண்டுள்ளது.

மேலும் சிங்கப்பூருடனான ஒப்பந்தத்தினால் இலங்கை பொருளாதாரத்தின் அனைத்து வாசல்களும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வேண்டிய ஒரு நாட்டிற்கு இலங்கையின் பொருளாதாரத்திற்குள் நுழைய முடியும்.

இவ்வாறான நிலமையின் போது எமது நாட்டின் பொருட்கள் மற்றும் சேவையின் சந்தை உறுதியாக இல்லையெனின் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும்.

எமது நாட்டின் பொருளாதாரத்தை சிங்கப்பூரிற்கு திறந்து விடுவேமேயானால் இந்தியாவிற்கும் திறந்து விட வேண்டிய நிலை ஏற்படும். அதனடிப்படையில் இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தில் இலங்கை கையொப்பமிட்டே ஆக வேண்டும்.

சிங்கப்பூருடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் 64 வகையான குப்பைகளை இலங்கைக்கு கொண்டுவர வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் இலங்கையை ஆசியாவின் குப்பைத் தொட்டியாக மாற்ற இந்த ஒப்பந்தம் வழியமைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment