எலிக் காய்ச்சல் – பொதுமக்களை அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை…

224 0

இலங்கையில் எலி காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2018ம் ஆண்டின் இதுவரையில் 1,574 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா, களுத்துறை, காலி , மாத்தறை, இரத்தினபுரி, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இந்த நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கேகாலையில் முறையே 92, 97 பேர் எலி காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர்.

ஜூன் மாதத்தில் மட்டும் 49 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யும்நோய் தொற்றுக்குள்ளாகிய விலங்குகளின் சிறுநீர் மூலம் எலி காய்ச்சல் பரவுகிறது. பருவமழை தொடங்கியுள்ளதால், எலி காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், குறித்த நோய் தொடர்பில் பொதுமக்கள் சுகாதாரத்துடன், பாதுகாப்பாக இருக்குமாறு இலங்கை சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment