அனைத்து தபால் சேவை ஊழியர்களினதும் விடுமுறைகளை இரத்துச் செய்ய தபால் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
23 தபால் தொழிற்சங்கங்கள் இன்று பிற்பகல் முதல் முன்னெடுத்துள்ள தொடர்ச்சியான வேலை நிறுத்த போராட்டத்தை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தபால் சேவை ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தபால் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

