பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகராவிடம் குற்றவியல் விசரனைப் பிரிவினர் (CID) சுமார் 5 மணி நேரம் விசாரணை செய்துள்ளனர்.
பேர்பேச்சுவல் ட்ரெஸரீர் நிறுவனத்திடமிருந்து (PTL) பணம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த விசாரணை இன்று இடம்பெற்றுள்ளது.
மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டுள்ள B அறிக்கை படி, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர 2015ம் ஆண்டில் PTL நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்றிடமிருந்து 1 மில்லியன் பெறுமதியான காசோலை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மத்திய வங்கி பிணை முறி மோசடி பணத்தை பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பெற்றுக்கொண்டாரா என்பது தொடர்பில் CIDயினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

