10 இலட்சம் பலா மரக்கன்றுகளை நடும் திட்டம் இன்று ஆரம்பம்

313 0

‘நாம் வளர்ப்போம் – நாம் உண்ணுவோம்’ என்ற துரித விவசாய அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக 10 இலட்சம் பலா மரக்கன்றுகளை நடும் திட்டம் இன்று ஆரம்பமாகிறது.

இது தொடர்பான பிரதான வைபவம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் பாணந்துறை – ஜெரமியஸ் தியஸ் கனிஷ்ட பாடசாலையில் இன்று காலை இடம்பெறுகிறது.

ஆதர் வி தியஸின் பலா மறுமலர்ச்சி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 100 வருடங்களாகின்றதுடன் இதனை முன்னிட்டு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்

Leave a comment