யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் வெளிமாவட்ட மீனவர்கள் தங்கியிருந்து கடலட்டை பிடிப்பதை தடுக்கக்கோரி முற்றுகைப் போராட்டத்தில்….. (காணொளி)

14 0

வடமராட்சி கிழக்கில் வெளிமாவட்ட மீனவர்கள் தங்கியிருந்து கடலட்டை பிடிப்பதை  தடுக்கக்கோரி வடமராட்சி கிழக்கு மக்களுடன் இணைந்து மக்கள் பிரதிநிதிகள் யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் வாடி அமைத்து கடலட்டை பிடிக்கும் வெளிமாவட்ட மீனவர்கள் தொடர்பில் யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்தறை திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்க தவறியமையைக் கண்டித்து இன்று நீரியல் திணைக்கள மாவட்ட அலுவலகத்திற்குள் திணைக்கள அதிகாரிகளை நுழையவிடாது அலுவலகத்தை பூட்டி   வடமராட்சி கிழக்கு மக்களுடன் இணைந்த மக்கள் பிரதிநிதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது தமது கடமைகளை மேற்கொள்வதற்காக திணைக்களத்திற்கு வருகைதந்த அதிகாரிகள் மக்களின் நிர்வாக முடக்க போராட்டத்தையடுத்து, திணைக்களத்திற்குள் நுழையமுடியாது வெளியில் இருந்தனர்.

தொடர்ந்து நீரியல் வளத்துறை அதிகாரிகளுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் இடையில் சமரசப்பேச்சுவார்த்தை நீரியல் திணைக்கள நுழைவாயிலில் இடம்பெற்றது.

இந்த சமரசபேச்சுவார்த்தையின்போது கடற்றொழில் நீரியல் திணைக்களம் அத்துமீறிய மீன்பிடி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கத்தவறியமை தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

வடமராட்சி கிழக்கில் மீன்பிடியில் ஈடுபடும் மக்களின் வாழ்வாதாரத்தை அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் வெளிமாவட்ட மீனவர்கள் தடுப்பது தொடர்பிலும் தெரிவிக்கப்பட்டது, இதனையடுத்து உரிய நடவடிக்கையினை எடுப்பதாக நீரியல் திணைக்கள அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டதையடுத்து மக்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ்;ப்பாண மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தை முடக்கி மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் வடமராட்சி கிழக்கு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள்இதமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் உட்பட வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா, ரவிகரன்,ச .சுகிர்தன்,வே.சிவயோகன்,அ.பரஞ்சோதி, கேசவன் சயந்தன், இ.ஜெயசேகரம், பருத்தித்துறை பிரதேசசபைத் தவிசாளர் அரியகுமார் மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள்,  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோரும் இப்போராட்டத்தில் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முற்றுகைப்போராட்டத்தின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன்……………

 

 

Related Post

கிரான்ட்பாஸ் பிரதேசத்தில் கட்டடிம் ஒன்று இடிந்து விழுந்ததில் 7 பேர் பலி(காணொளி)

Posted by - February 14, 2018 0
கொழும்பு – கிரான்ட்பாஸ் பபாபுள்ளே மாவத்தை பிரதேசத்தில், பழைய கட்டடிம் ஒன்று இடிந்து விழுந்ததில், சம்பவ இடத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காயமடைந்துள்ளனர். இந்த…

இரணைமடுக்குளத்து நீர் வீண் விரயமாகின்றது!

Posted by - March 6, 2019 0
கிளிநொச்சி இரணைமடுக் குளம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுமார் 2 ஆயிரத்து 178 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட போதும் அதன் புனரமைப்புக்களில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக…

பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் விரைவில் கையளிக்கப்படும் சாத்தியம்!

Posted by - February 15, 2017 0
பிலக்குடியிருப்பு மக்களுடைய பிரச்சினை ஜனாதிபதியின் கவனத்திற்கு சென்றிருக்கும் நிலையில், ஜனாதிபதி மக்களுடைய காணிகளை மக்களிடமே கையளிக்கும்படி கூறியுள்ளதாக நாம் அ றிகிறோம்.

மாவீரர் நாளுக்காக தயாராகிறது அளம்பில் துயிலுமில்லம்

Posted by - November 26, 2018 0
தாயகப் பிரதேசமெங்கு காணப்படுகின்ற மாவீரர் துயிலுமில்லங்கள் நாளைய மாவீரர் நாளுக்காக தயார்ப்படுத்தப்படுகின்றன.அந்தவகையில் முல்லைத்தீவு – அளம்பில், மாவீரர் துயிலுமில்லமும் தயார்ப்படுத்தப்பட்டுவருகின்றது. அந்தப் பகுதி இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து,…

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் மீது கல்வீச்சு தாக்குதல்

Posted by - June 17, 2018 0
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் மீது, கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் இன்று கொடிகாமம் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவத்தின்போது, புகையிரதத்தில் பயணித்த கடற்படைச் சிப்பாய்…

Leave a comment

Your email address will not be published.