பொதுமக்களை சுரண்டி வாழும் நிலையே நல்லாட்சியிடம்- திஸ்ஸ விதாரண

219 0

“தேசிய பிரச்சினைக்கு தீர்வு தருவதாக தமிழ் மக்களுக்கு ரணில் மற்றும் மைத்திரி உறுதிமொழி வழங்கினார்கள். ஆனால் இன்று வரை அது நிறைவேற்றப்பட வில்லை என தெரிவித்த பேராசிரியர் திஸ்ஸ விதாரண , அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் வேடிக்கையாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து தொடர்ந்தும் பேராசிரியர் தெளிவுப்படுத்துகையில் ,

அரசாங்கத்தின் செயற்பாடுகள் வேடிக்கையாக உள்ளன. அர்ஜுன் அலோசியசிடமிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. 118 பேர் அவ்வாறு பெற்றுக்கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் ஊழலை ஒழித்து நல்லாட்சியை உருவாக்குவதாக கூறிக்கொண்டு ஆட்சிப்பீடம் ஏறிய ரணில் – மைத்திரி அரசாங்கம் தற்போது என்ன செய்கின்றது.

மக்களை ஏமாற்றி நாட்டை படுப்பாதாளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பொருளாதார ரீதியில் இனிவரும் நாட்கள் இலங்கைக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தப்போகின்றது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும். நாட்டின் கடன் சுமையும் அதிகரிக்கும். அரசாங்கத்திற்கு என்று ஒரு கொள்கையில்லை. பொதுமக்களை சுரண்டி வாழும் நிலையே நல்லாட்சி அரசிடம் காணப்படுகின்றது.

ஆட்சிக்கு வரும் பொது நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகள் எதுவும் இதுவரையில் நிறைவேற்றப்பட வில்லை. தேசிய பிரச்சினைக்கு தீர்வு தருவதாக தமிழ் மக்களுக்கு ரணில் மற்றும் மைத்திரி உறுதிமொழி வழங்கினார்கள். ஆனால் இன்று வரை அது நிறைவேற்றப்பட வில்லை. மாறாக இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளே காணப்படுகின்றது.

இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு மாத்திரம் அல்ல நாட்டின் பொது பிரச்சினைகளுக்கும் தீர்வை தராது . அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்வதங்காக போலியான பிரசாரங்களை செய்து காலத்தை கடத்தும் செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றது. எனவே மக்கள் அடுத்த இனிவரும் தேர்தல்களில் நாட்டின் நலன் கருதி வாக்களிக்க வேண்டும்.” என்றார்.

Leave a comment