அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த கலாநிதி இஸ்மாயில் பாராளுமன்றத்தில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியது, இதனையடுத்தே கலாநிதி இஸ்மாயில் சபாநாயகர் கரு ஜெயசூரிய முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக தனது சத்தியபிரமாணத்தை செய்து கொண்டார்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எம்.பி.யாக செயற்பட்ட நவவி அண்மையில் தன் பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்த நிலையில் அவரது வெற்றிடத்திற்கு அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த கலாநிதி இஸ்மாயில் நியமிக்கப்பட்ட நிலையில் அவர், தனது பாராளுமன்ற உறுப்புரிமைக்கான சத்தியப்பிரமாணத்தை செய்து கொண்டார்.

