சைட்டம் மாணவர்கள் தெடர்பான சட்டமூலம் சமர்ப்பிப்பு

294 0

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சைட்டம் மாணவர்களை இணைத்து செயற்படுவதற்கான சட்டமூலம்  பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

பாராளுமன்றத்தில் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடிய வேளையில் உயர்கல்வி அமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான விஜயதாஸ ராஜபக்ஷவினால் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ( விசேட ஏற்பாடுகள்) தெற்காசிய தொழிநுட்பவியல் மற்றும் மருத்துவ நிறுவனத்திடம் பதிவு செய்யப்பட்ட மாணவர்களை 1981ஆம் ஆண்டின் 682ஆம் இலக்க ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சைட்டம் மாணவர்களை இணைத்துக் செயற்படுவதற்கான சட்டமூலத்தின் கீழ் தாபிக்கப்பட்ட ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு உள்ளீர்த்தல் தொடர்பான தேசியக் கொள்கையை விதிப்பதற்கும் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடுகள் செய்வதற்குமானதொரு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.

Leave a comment