இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையின் சி 350 ஆவணத்தைப் பகிரங்கப்படுத்துவதால், விசாரணைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லையென, சட்டமா அதிபரால், ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பிணைமுறி விவகார விசாரணையின் முழுமையான அறிக்கையை பகிரங்கப்படுத்துவது குறித்து, சட்ட மா அதிபரின் ஆலோசனையைக் கோரி, ஜனாதிபதியின் செயலாளரால், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, சட்ட மா அதிபரால், இன்று (08) இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

