மத்திய வங்கி பிணை முறை மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைப்பது பொருத்தமற்ற நடவடிக்கை என்பதனால், கூடிய விரைவில் விசாரணையை முடிவுக்குக் கொண்டுவருமாறும் உத்தரவிட்டுள்ளார்.

