புளியம்பொக்கணையில் வெடிபொருட்கள் மீட்பு

192 0

புளியம்பொக்கணை பகுதியில் அமைந்துள்ள கரைச்சி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காணியிலுள்ள பாவனையற்ற மலசலகூட குழி ஒன்றில் வெடிபொருட்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழியில் மோட்டார் செல்கள், கைக்குண்டுகள் என பல்வேறு வகையான வெடிபொருட்கள் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இந்த வெடிபொருட்களை அகற்றவது மற்றும் செயலிழக்க செய்வது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a comment