மஹரகம நகர சபையில் அமைதியின்மை !

266 0

மஹரகம நகர சபையை கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிக்கொண்ட சுயாதீன குழு 2 ஐ பிரதிநிதித்துவப்படுத்திய ஆறு பேர் பதவி விலகி, அப்பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பதவியேற்பதற்கு ஜே.வி.பி. மற்றும் ஐ.தே.கட்சி.யினர் எதிர்ப்பு தெரிவித்தமையால் மஹரகம நகர சபையில் அமைதியின்மை காணப்பட்டது.

இவ் அமைதியின்மை காரணமாக மஹரகம நகர சபை கூட்டத்தொடரை நகரசபைத் தலைவர் ஒத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மஹரகம நகர சபையை கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட சுயாதீன குழுக்கள் கைப்பற்றியிருந்தனர். இதில் சுயாதீன குழுக்கள் இல 2 வெற்றிப்பெற்ற ஆறு பேர் மஹரகம நகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து அப்பதவிகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அறுவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர் .

இதற்கு மஹரகம நகர சபையில் ஜே.வி.பி மற்றும் ஐ.தே.க. நகர சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தமையால் மஹரகம நகர சபையில் அமைதியின்மை காணப்பட்டது. இதனால் மஹரகம நகர சபை கூட்டத்தொடரை நகர சபைத் தலைவர் ஒத்தி வைத்துள்ளதோடு, இப்பதவி ஏற்பு தொடர்பில் நீதித்துறையில் ஆலோசனையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Leave a comment