இவ்வருட இறுதிக்குள் தேர்தல்-திஸாநாயக்க

230 0

காலாவதியாகியுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளருமான எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இதனை ஜனாதிபதி அறிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் நடாத்தப்படும் முறைமை தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் இல்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment