திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு ஐ.தே.க. அழைப்பு

475 0

பல்வேறு காரணங்களுக்காக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை கட்சியுடன் வந்து சேர்ந்துகொள்ளுமாறு திறந்த அழைப்பொன்றை விடுத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்த அழைப்பு முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கும் பொருந்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சகலரையும் ஒன்றிணைத்து கட்சியைப் பலப்படுத்தி முன்னோக்கி எடுத்துச் செல்வது இதன் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a comment