கடந்த மார்ச் மாதம் கண்டியில் ஏற்பட்ட வன்முறை அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை அறிந்தே.எனினும் குறித்த சம்பவத்தில் வன்முறையில் ஈடுபட்ட பலர் இன்னும் பொலிஸில் சிக்காமல் தலைமறைவாகி உள்ளனர்.
அந்த வகையில் கண்டி வன்முறையின் போது ஆண்களுடன் இணைந்து பெண்ணொருவர் பள்ளிவாசலை உடைக்கும் காட்சி காணொளி மூலம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த பெண் திகன – கெங்கல்ல ஜூம்மா பள்ளிவாசல் மீது கல் எறிந்து தாக்கி அட்டகாசம் செய்திருந்தார்.
எனினும் குறித்த பெண் கைதாகாத நிலையில், நேற்று முன்தினம் நொச்சியாகம பொலிசாரிடம் மாட்டியுள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண்ணிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது

