துப்பாக்கி சூடு சம்பவத்தை திசை திருப்பவே தூத்துக்குடிக்கு ரஜினி வந்தார்- சீமான்

256 0

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை திசை திருப்பவே ரஜினிகாந்த் வந்ததாக நெல்லையில் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் பலியானதற்கு ஆறுதல் கூறவந்த ரஜினிகாந்த் துஷ்டி கேட்பது போல் வரவில்லை. கைகளை உயர்த்தியும், திறந்த காரிலும் வந்து ஓட்டு கேட்பது போல் வந்தார். அவர் சமூக விரோதிகள் என்று கூறுவது யாரை? இதை அவர் விளக்க வேண்டும்.

ஏராளமான மக்கள் குண்டடி பட்டு கிடக்கிறார்கள். அவர்களில் யாரும் சமூக விரோதிகள் என்றார்களா? பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அமைச்சர்கள் என்ன கூறினார்களோ அதைத்தான் ரஜினிகாந்த் கூறியுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை திசைதிருப்பவே ரஜினிகாந்த்தை அனுப்பியுள்ளார்கள். அவர் ஆறுதல் கூற வரவில்லை.

மக்களுக்காக போராடுபவர்கள் மீது தேசதுரோக வழக்குகள் போடப்படுகிறது. என்மீதும் வழக்கு போட்டார்கள். இப்போது வேல்முருகன் மீது போட்டார்கள். இது மத்தியஅரசின் சர்வாதிகார போக்கை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment