பெல்ஜியம் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

342 0

பெல்ஜியம் நாட்டின் லீய்ஜ் நகரில் கடந்த செவ்வாய் அன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

பெல்ஜியம் நாட்டின் தலைநகரான புருசெல்ஸ் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் லீய்ஜ் என்னும் அழகிய நகரம் அமைந்துள்ளது.
பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் அதிகமாக வாழும் இந்நகரின் மையப்பகுதியில் உள்ள பள்ளி அருகே (உள்நாட்டு நேரப்படி) கடந்த செவ்வாய்கிழமை காலை 10.30 மணியளவில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் அவ்வழியாக சென்ற இரு போலீசார் மற்றும் ஒரு நபரை சுட்டுக் கொன்றான்.
உடன்வந்த போலீசார் நடத்திய எதிர் தாக்குதலில் அந்த கொலையாளியும் சுட்டுக் கொல்லப்பட்டான். போலீசாரை கொன்ற மர்ம நபர் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆனால் அது தொடர்பான எந்த ஆதாரத்தையும் அந்த அமைப்பு வெளியிடவில்லை. இவ்வாறு நடத்தப்படும் தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பது தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் அதற்கான எந்த ஆதாரங்களையும் அந்த அமைப்பு வெளியிடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment