தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான ஈழத் தமிழனுக்கு வீரவணக்கம்!

1066 20

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் அங்கு அகதியாக வாழ்க்கை நடாத்திவந்த ஈழத் தமிழரான கே. கந்தையா என்பவரும் பலியாகி உள்ளார்.

58 வயது நிரம்பிய இவர் தூத்துக்குடி சிலோன் காலனியில் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார்.

1981ம் ஆண்டு ஈழத்தில் இருந்து தமிழ் நாட்டுக்கு புலம்பெயர்ந்த இவர், கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்ததாக தமிழ் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தோடு, நாசக்கார ஸ்டெர்லைட்டுக்கு இன்னுயிர் தந்த ஈழத்தமிழனுக்கு வீரவணக்கம் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாதைகள் தூத்துக்குடியின் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment