விஷ ஊசிப் பரிசோதனை நடாத்தப்படவேண்டுமென வலியுறுத்தி ஐநாவுக்கு கடிதம்!

328 0

adaa1புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய வைத்தியப் பரிசோதனைகள் நடைபெறவேண்டுமென வலியுறுத்தி இலங்கைத் தமிழ் சட்டத்தரணிகள் ஒன்றியம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளருக்கு அறிக்கையொன்றினைச் சமர்ப்பித்துள்ளது.

மருத்து விஞ்ஞானம் மற்றும் சர்வதேச மருத்து நிபுணர் கொண்ட குழுவை நியமிக்கவும் பாதிப்பிற்குள்ளான முன்னாள் போராளிகளை சோதணையிட அந்த குழுவிற்கு அனுமதி அளிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தவும், நிபுணத்துவ குழுவின் அறிக்கையைச் சமர்ப்பிக்கவும், ஐநா சபையின் மனித உரிமை ஆணையாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,போரின் பின்னரான முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வின் போது உடலுக்குள் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற விஷ ஊசி விவகாரத்தினால் போராளிகள் பலர் உள மற்றும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக உள்ளக பொறிமுறைகள் பொறுப்புடமையை வெளிப்படுத்துவதாக இல்லை. உடல் சமநிலையற்று போதல், வலுவிழத்தல், தலைச்சுற்று மற்றும் கண் பார்வை குறைதல் என புனர்வாழ்வு பெற்ற போராளிகள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.

விஷ ஊசியை உடலுக்குள் ஏற்றினால் அதனை எளிதில் அடையாளம் காண முடியாது . சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இலங்கை பாதுகாப்பு படைகள் பயிற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் இவ்வாறு எதிரானவர்களை மர்மமான முறையில் அழிக்கும் உத்திகளை கற்றிருப்பார்கள்.

ஆகவே தான் வெறும் வைத்தியர்கள் மற்றும் உள்ளடக்காத நிபுணத்துவம் கொண்ட விஞ்ஞானிகளை  கொண்ட விஷேட குழுவை பரிந்துரைக்க கேட்டுக் கொள்கின்றோம் என அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.