16 பேர் உயிரிழப்பு; ஒருவரை காணவில்லை – 127,913 பேர் பாதிப்பு

196 0

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 16 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் நாட்டின் 19 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இயற்கையின் சீற்றத்தில் 127,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டின் தென்மேற்கு பகுதியில் காணப்படும் மழையுடனான வானிலை நீடிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 – 150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Leave a comment