அரசாங்கத்தின் வருமானம் அதிகரித்தால் வரிச்சுமையைக் குறைக்கலாம்- மங்கள

219 0

நாட்டு மக்களின் சுமையை குறைக்கும் வகையில் 2020 இல் வற் வரி 2.5 சதவீதத்தால் குறைக்கப்படுமென நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர  தெரிவித்தார்.

சுங்கத் திணைக்களத்திற்காக புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள 68 உதவி அத்தியட்சகர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று உரையாற்றுகையில் இதனைக் கூறினார்.

நாட்டிலுள்ள ஏழை மக்களே மறைமுகமான வழிகளில் அரசாங்கத்துக்கு வரிகளை செலுத்துகின்றனர். இச்சுமையை நாம் நீக்க வேண்டும். இதற்காக 2020 இல் வற் வரியை 2.5 சதவீதத்தால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளேன்.

ஏனைய வரிகள் முறையாக அறவிடப்படும் போதே அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கும். இதனையடுத்து, மக்களின் வரிச் சுமைகளைக் குறைக்க முடியுமாக இருக்கும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அடுத்த வரவு செலவு திட்டத்துக்கு முன்னர் புதிய சுங்கச் சட்டமொன்று பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்படுமென்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

Leave a comment