தேசிய அடையாள அட்டை எண் : EPF, ETF கணக்கின் இலக்கமாகும்- அமைச்சு

327 0

ஈ.பி.எப். மற்றும் ஈ.ரி.எப். நிதியங்களில் உள்ள ஊழியர்களின் கணக்கு இலக்கங்களை அவர்களது அடையாள அட்டை இலக்கங்களுக்கு ஏற்ப மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த புதிய முறைமையினால் ஊழியர்கள் தங்களது நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் போது ஏற்படும் அசௌகரியங்களிலிருந்து விடுபட முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்பொழுது ஈ.பி.எப். நிதியத்தில் 2 ஆயிரம் பில்லியன் ரூபாவும், ஈ.ரி.எப்.நிதியத்தில் 286 பில்லியன் ரூபாவும் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் துறையில் எமது நாட்டில் 80 லட்சம் ஊழியர்கள் பணி புரிந்தாலும், அதில் 26 லட்சம் பேர் மாத்திரமே இந்த நிதியத்திற்கு உரிய முறையில் நிதியைச் செலுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரையில் நிதியத்துடன் தொடர்பற்று இருப்பவர்களை இணைத்துக் கொள்வதற்கு தொழிலாளர் திணைக்களம் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

Leave a comment