சபையில் தனியான எதிர்க் கட்சிக் குழுவாக செயற்பட மஹிந்த இணக்கம்- ரி.பீ. ஏக்கநாயக்க

319 0

அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேரும் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனியான ஒழு குழுவாக செயற்படும் எனவும், இதன்படி பாராளுமன்ற அமர்வின் போது குழுக்களின் தலைவர்களுக்கான பதவியில் ஒருவரை நியமிக்கவுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட ரி.பீ. ஏக்கநாயக்க எம்.பி. தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையினான கூட்டு எதிரணியுடன் சேர்ந்து செயற்படுவதோடு, பாராளுமன்றத்தில் தனியான ஒரு எதிரணிக்குழுவாகவும் செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment