நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும்!! பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கை!!

270 0

இலங்கையின் தென் மேற்கு பகுதிகளில் பெய்து வரும் அடைமழையுடனான காலநிலை மேலும் தீவிரம் அடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இன்றிரவு முதல் அதிகளவு மழையுடன் கூடிய காலநிலையை எதிர்ப்பாக்கலாம் என திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேல், தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாணத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறிப்பிடப்படுகின்றது.

ஏனைய பகுதிகளுக்கு மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் தாண்டிய மழைவீழ்ச்சி பதிவாகும். முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் மழை பெய்யக் கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் எனவும், இடி மின்னல்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்து கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களிடம் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a comment