சீரற்ற காலநிலையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு

1890 123

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர்  நாயகம் அமலநாதன் தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியாலர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 19 மாவட்டங்கள் வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 10 ஆக உயர்வடைந்துள்ளது.

இந் நிலையில் 14432 குடும்பங்களைச் சேர்ந்த 52380 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 4075 குடும்பங்களைச் சேர்ந்த 12132 பேர் 137 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்ப்ட்டுள்ளனர்.

மேலும் சீரற்ற காலநிலை இன்றும் நாளையும் தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment