புதுக்குடியிருப்பில் பதற்றம்

356 0

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் மீது சிறப்பு அதிரடிப்படை வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தியது என்று கூறப்படுகின்றது.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடந்த வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

 மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் மீது சிறப்பு அதிரடிப்படை வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தியது என்று கூறப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்து புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment