யாழ்ப்பாணத்தில் மழை!

430 0

யாழ்ப்பாணத்தில் தற்போது மழையுடன் கூடிய கால நிலை நிலவுகின்றது. கடும் மின்னல், இடியுடன் மழை பெய்து வருகின்றது.

 யாழ்ப்பாணத்தில் தற்போது மழையுடன் கூடிய கால நிலை நிலவுகின்றது. கடும் மின்னல், இடியுடன் மழை பெய்து வருகின்றது.

திருநெல்வெலிப் பகுதியில் மின்னல் தாக்கி தென்னை மரமொன்று பற்றி எரிந்தது. யாழ்ப்பாணம் மாநகர சபையினர் சென்று தீயை அணைத்தனர்.

மின்னலுடன் கூடிய மழையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் தென்னை மரம் மின்னல் தாக்கி தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.

 இந்தச் சம்பவம் இன்று நண்பகல் 12.50 மணியளவில் நடந்தது என்றும் தீ அணைப்பதற்கான எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பகுதிகளிலும் இன்று முற்பகல் தொடக்கம் பரவலாக இடியுடன் கூடிய மழை பொழிந்துவருகிறது

Leave a comment