முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரையும் எதிர்வரும் ஜூன் மாதம் 05ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் சம்பந்தமாகவே அவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு இன்று நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட போது, சம்பவம் குறித்து தொடர் விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக இரகசியப் பொலிசார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இந்நிலையில் அடுத்த வழக்குத் தவணையின் போது விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை சமர்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான் அதுவரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

