16 பேரும் மஹிந்தவுடன் இணைய ஜி.எல். பீரிஸ் நிபந்தனை

332 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கையையும் ஏற்றுக் கொள்வதாயின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மட்டுமல்ல எந்தவொரு அரசியல் கட்சியினதும் உறுப்பினரை தமது கட்சி வரவேற்கும் என பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் போன்ற அனைத்திலும் கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள கட்சிகளுடன் இணைந்து பொதுஜன பெரமுனவின் மலர் மொட்டு சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாகவும்  அவர்  குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேர் கொண்ட குழு நாளை (23) மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாகவும் அவர்களுக்கும் எமது கட்சியின் கதவு திறந்தேயுள்ளது.

அவர்கள் எங்களுடன் இணைவதாக இருந்தால், மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு அரசியல் கட்சிக்கு ஒரு தலைவரே இருக்க வேண்டும் எனவும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment