14 பாதிரியார்களுக்கு கர்டினல் பட்டம் – போப் பிரான்சிஸ்

279 0

1 நாடுகளை சேர்ந்த 14 பாதிரியார்களுக்கு கர்டினல்களாக பதவி உயர்வு அளிப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

இத்தாலி, ஸ்பெய்ன், போர்ச்சுக்கல், போலந்து, ஈராக், பாகிஸ்தான், ஜப்பான், மடகாஸ்கர், பெரு, மெக்சிகோ மற்றும் பொலிவியா போன்ற கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிறுபான்மையாக உள்ள 11 நாடுகளில் ஏழைகளுக்கு சேவை செய்து வந்த 14 பாதிரியார்களை கர்டினல்களாக பதவி உயர்வு அளிக்கப்போவதாக போப் பிரான்சிஸ் இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக வரும் ஜூன் மாதம் 29-ம் தேதி வாடிகன் தேவாலயத்தின் தலைமை குழுவுடன் ஆலோசனை நடத்த போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போப் மரணித்தால் அல்லது ஒய்வை அறிவித்தால், புதிய போப்பை தேர்வு செய்யும் உயர் அமைப்பில் இதுவரை 120 பேர் மட்டுமே கர்டினல்களாக இருந்தனர். இந்த எண்ணிக்கை போப் பிரான்சிஸ் பதவிக்காலத்தில் 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த 125 கர்டினல்களில் பாதிக்கும் பெரும்பாலானவர்களை கடந்த 2013 பதவியேற்ற போப் பிரான்ஸிசால் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆவர்.
ஈராக் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்களின் மீது சமீப காலமாக அதிகளவில் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த இரண்டு நாடுகளிலும் இருந்து கர்டினல்களை போப் தேர்வு செய்ய உள்ளதன் மூலம் அந்த நாடுகளில் உள்ள உள்ளூர் தேவாலயங்களுக்கான தனது ஆதரவை போப் பிரான்சிஸ் உறுதிபடுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.

Leave a comment