சட்டவிரோத சிகரட் தொகையுடன் ஒருவர் கைது

236 0

ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸாரினால் சட்டவிரோத 1220 சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (19) இரவு குற்றதடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபர் கைது செய்யபட்டதாக ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யபட்ட சந்தேக நபரிடம் இருந்து சட்டவிரோதமாக கவலம் செய்யபட்ட சிகரட்டுகளும் மீட்கபட்டதாக குற்றதடுப்பு பொலிஸாரினால் மேற்கொள்ளபட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செ​ய்யபட்ட சந்தேக நபர் இன்று (20) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபட உள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment