தமி­ழர்­க­ளின் எதிர்­பார்ப்பு நிறை­வே­றாது-சிவ­சக்தி ஆனந்­தன்

251 0

தேசிய அர­சுக்­குள் ஏற்­பட்­டி­ருக்­கும் பிரச்­சி­னை ­க­ளைப் பார்க்­கும் போது தமிழ் மக்­கள் எதிர்­பார்த்த விட­யங்­கள் நடை­பெ­றுமா என்ற சந்­தே­கத்தைத் தோற்­று­வித்­துள்­ளது.

இவ்­வாறு வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் தெரி­வித்­தார்.

புளி­யங்­கு­ளத்­தில் நேற்று நடை­பெற்ற மாதிரி வீட்டுத் ­திட்­டத்தை திறந்து வைக்­கும் நிகழ்­வில் கலந்து கொண்டு கருத்­துத் தெரி­விக்­கும் போதே அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தில் எமக்­கும் பெரும் பங்கு இருக்­கி­றது. அந்த மாற்­றம் நீண்ட கால­மாக தீர்க்­கப்­ப­டா­மல் இருக்­கும் தேசிய இனப்­பி­ரச்­ச­னைக்கு ஒரு தீர்வை பெற்று தரும் என்று நினைத்­தி­ருந்­தோம். ஆட்சி மாற்­றம் ஏற்­பட்டு 3 வரு­டங்­கள் கடந்­தி­ருக்­கின்­றன.

தேசிய அர­சுக்­குள் ஏற்­பட்­டுள்ள பிரச்­சி­னை­க­ளைப் பார்க்­கும்­போது நாங்­கள் எதிர்­பார்க்­கும் விட­யங்­கள் நடை­பெ­றுமா? என்று என்ன தோன்­று­கி­றது.

இன்­னும் 2 வரு­டங்­களே இந்த அர­சுக்கு இருக்­கி­றது. அதற்­குள் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்வு காணப்­ப­டு­வ­து­டன், போரால் பாதிக்­கப்­பட்ட எமது பகு­திக்­குத் தேவை­யான அபி­வி­ருத்­தித் திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­து­டன் எமது மாகா­ணத்­துக்கு அதி­க­மான நிதியை ஒதுக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்­றார்

Leave a comment