புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகளை மீண்டும் எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு செயற்குழு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் 24 ஆம் திகதி கூடவுள்ளது. இதன்போது, அரசியலமைப்பு தொடர்பிலான இறுதி அறிக்கை பற்றியும் கலந்தாலோசிக்கப்படவுள்ளதாகவும் அக்குழுவின் உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

