நுவரெலியா – ஹட்டன் பூல்பேங் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் நாளை பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளன.
மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்புவசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.
மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 5ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

