பாலச்சந்திரனின் ஒளிப்படத்தை படகு வடிவில் அமைத்து அஞ்சலி!

10112 152

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு தமிழர் நலம் பேரியக்கம் சார்பில் இராமேஸ்வரம் தீர்த்தக் கரையில் நேற்று நூதன முறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் ஒளிப்படத்தை படகு வடிவில் அமைத்து, அதனை இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் சுடரேற்றி முள்ளிவாய்க்கால் நோக்கி மிதக்க விட்டுள்ளனர்.

மெழுகுவர்த்தி ஏற்றியும் கடலில் பூக்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment