அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

602 0

அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அநுருத்த பொல்கம்பொல பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் இன்று (08) 5 இலட்சம் ரூபா சரீர பிணையில், அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை வழங்கியது.

மேலும், அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அநுருத்த பொல்கம்பொல வௌிநாடு செல்லவும் தடை விதித்துள்ளது.

அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அநுருத்த பொல்கம்பொல, 8 மில்லியன் ரூபா பண மோசடி தொடர்பில் நீதிமன்றில் ஆஜராக காரணத்தால் பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment