முல்லையில் முடங்கிய வர்த்தக நிலையங்கள்!

399 0

2009 ம் ஆண்டு இறுதிப் போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளுக்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக இடம்பெறுகிறது.

இந்த நிலையில் இன்றைய தினம் நண்பகல் 12 மணிவரை தமிழர் தாயகத்திலுள்ள வர்த்தகர்கள் கடைகளை அடைத்து துக்கதினமாக அனுட்டிக்குமாறு கோரப்பட்டது.

அதற்கு அமைவாக இன்று முல்லைத்தீவு மாவட்ட வர்த்தகர்கள் மாவட்டமெங்கும் வர்த்தக நிலையங்களைப் பூட்டி இன்றைய நாளை துக்கதினமாக அனுட்டித்து வருகின்றனர்.

இதேவேளை இன்றைய முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தற்பொழுது முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment