வளைகுடா பகுதியில் ‘சாகர்’ புயல்

761 0

ஏடன் வளைகுடா பகுதியில் ‘சாகர்’ என்ற புயல் உருவாகியுள்ளதால் தென்மேற்கு அரபிக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.

ஏடன் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு சாகர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் யெமன் நோக்கிச் செல்லக்கூடும் என்பதால் மீனவர்கள் தென் மேற்கு அரபிக் கடல் பகுதிக்கு அடுத்த இரு நாள்களுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயலால் தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. எனினும் திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் 100 முதல் 104 பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு நிலைய அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a comment