மஹிந்த் மீது சரமாரி குற்றம் சாட்டிய ரணில்

328 0

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நாம் காரணமல்ல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமே காரணமென, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மஹிந்த ஆட்சி காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. இதன்போது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தெரியாமல் தப்பித்து ஓடினரெனவும் ரணில் தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் ஆட்சியாளர்கள் நாட்டை கடன் சுமைக்கு இட்டுச் சென்றுள்ளனர். இதனால் அக்கடன்களை செலுத்தி பொருளாதாரத்தை சீராக்கி நாட்டை முன்நோக்கி கொண்டுச் செல்ல வேண்டிய நிலைமையில் உள்ளோம் எனவும் சுட்டிக்காட்டினார்.

இதனால் எம்மை விமர்சனம் செய்வதனை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியுமென ரணில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 அத்துடன் அமெரிக்காவின் பொருளாதாரம் தற்போது பலமடைந்தமையால் டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது. ஆனால் ஏனைய நாணயங்களின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் ரூபாவின் பெறுமதியை அதிகரிக்க நடவடிக்கை முன்னெடுத்துள்ளோமெனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment