இலங்கையில் திடீர் காலநிலை மாற்றம்!

353 0

இலங்கைக்கு அருகில் வளிமண்டலத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்களுக்கமைய இந்த விடயம் அவதானிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று இரவு இலங்கையின் பல பகுதிகளுக்கு அடை மழை பெய்ய கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பல பகுதிகளுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி இயக்குனர் பிரதிப் கொடிப்பில தெரிவித்துள்ளார்.

மத்திய, சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மேல், வட மேல் மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் 100 மில்லி மீற்றருக்கு அதிக மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இதற்கு மேலதிகமாக விசேடமாக மலையத்தில் மக்கள் மண் சரிவு தொடர்பில் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டியது கட்டாணம் எனவும், சுட்டிக்காட்டியுள்ளார்.

மண் சரிவு தொடர்பில் அவதானமாக இருப்பும் அதேநேரத்தில் புதிய நீரூற்றுகளின் தோற்றம், மரங்கள் அசைவு, நிலத்தில் விரிசல் போன்றவைகள் தொடர்பிலும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment